நடு ராத்திரியில் சிபிராஜுடன் காரில் சுற்றிய ஆண்ட்ரியா
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் ‘வட்டம்’. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக வெளியாகிறது.
இதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் SR பிரபு , “ கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும். நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து இந்த படத்திற்குள் அவரை கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்த படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்த படத்தை மெருக்கேற்ற பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. ” என்றார்.
சிபிராஜ் பேசியதாவது :-
‘வட்டம்’ எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் படத்தின் கதையை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது. இயக்குநர் கமலகண்ணன், இயக்குனர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர்.மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இதில் ஆண்ட்ரியாவுடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஷூட்டிங்கிற்காக் இரவு நேரங்களில் காரில் அதிக நேரம் சுற்றிக்கொண்டிருந்தோம். ஆண்ட்ரியா டயட்டில்தான் உடம்பை மெயிண்டெயின் பண்றதாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் கோயம்புத்தூரை சுற்றி ஷூட்டிங் நடந்தபோது சாலையோரங்களில் இருக்கும் கடைகளில் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கி சாப்பிட்டார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி”

இயக்குனர் கமலகண்ணன் பேசியபோது “இந்த படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம் முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்யும் சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்த சமூகத்தில் அதை விட பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. ”என்றார்.
ஆண்ட்ரியா பேசியபோது, “ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.”என்றார்