சினிமா செய்திகள்

கமலுடன் மோதும் சிம்பு : தெறிக்கவிடும் ‘தக்லைஃப்’ டிரைலர்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தக் லைப்’.. Thug Life

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.. ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மே 16ஆம் தேதி THUG life படத்தின் டிரைலர் மாலை வெளியானது.

இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. காரணம் இதில் அனைத்து அம்சங்களும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது..

என் உயிரைக் காப்பாற்றியவன் நீ என்று கமல்ஹாசன் பேசும் வசனத்துடன் இந்த ட்ரெய்லர் தொடங்குகிறது.. இதன் பிறகு கமலுக்கும் சிம்புக்கும் உள்ள பாசத்தை தொடர்ந்து ட்ரெய்லர் இறுதியில் கமல் சிம்பு மோதும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதன் இடையில் கமல்ஹாசன் அபிராமியின் லிப் லாக் காட்சி இடம் பெற்றுள்ளது.. இது விருமாண்டி பட ரசிகர்களுக்கு நிச்சயம் ஸ்பெஷல்தான்..

35 வருடங்களுக்கு முன்பு நாயகன் படத்தில் கமலை பார்த்த ஒரு உணர்வையும் இந்த படத்தில் ஒரு காட்சியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்..

மேலும் கமல் திரிஷா ரொமான்ஸ்னும் இடம்பெற்றுள்ளது.. அதில் மேடம் ஐ எம் யுவர் ஆடம் என்று கமல் பேசும் வசனமும் உள்ளது..

ஆக இதில் டைரக்டர் மணிரத்னம்.. கமல் ரசிகர்களை மட்டுமல்லாமல் சிம்பு ரசிகர்களையும் கவரும் வகையில் காட்சிகள் அமைத்து இருப்பது சிறப்பு..

நிச்சயம் ஜூன் 5 தேதி திரையரங்குகளில் கமல் & சிம்பு ரசிகர்களுக்கு திருவிழா தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE