நிகழ்வுகள்

காமெடி சாமியாரை கதையாக்கிய ’கம்பி கட்ன கதை’

இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கம்பி கட்ன கதை’ படத்தில் நட்டி நடராஜ், சிங்கம் புலி, முருகானந்தம், சாம்ஸ் ,மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.ஆர்.எம்.ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் செல்வம் இசையமைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி கலகலப்பான படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை மங்காத்தா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி பேசியதாவது:-

“இந்தப்படத்துக்கு  ‘கம்பி கட்டுன கதை’ என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க,பல விவாதங்களை நடத்தினோம். இந்தப்படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு.
ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும்,நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது.எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்தப்படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது.ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள்.
இந்தப்படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். இது ஒரு லாஜிக் இல்லாத கதை அல்ல . பகுதி 2 எடுக்கப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. எல்லோரும் இதைப்பார்த்து
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

கதாநாயகன் நட்டி பேசியதாவது:-

அனைவருக்கும் வணக்கம்.தயாரிப்பாளர் ஐயாவிற்கு நன்றி.தயாரிப்பு நிறுவனம் மங்காத்தா மூவீஸ் – இவர்களுக்கு நன்றி.
முதலாம் படம் எடுக்கிறதுன்னால,பட்ஜெட் குறைக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனா எதுவும் குறையாம பண்றவங்க – அவருதான் இந்த தயாரிப்பாளர்.ஒரு சாதாரண விஷயம்தான். கதை இங்கே இருந்தது – ஆனா ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் படம் உருவானது.
ஆர்ட் டைரக்டர் சிவா, கேமராமேன் ஜெய் அவர்களுக்கு நன்றி.இந்தப்படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
முருகானந்தம் சார், சிங்கம் புலி, தயாரிப்பாளர், இயக்குநர் கொடுத்த ஆதரவுதான் இந்தப்படத்தை வெற்றியாக்கியிருக்கு.
ஸ்ரீரஞ்சினி, ஷாலினி – நீங்கள் இருவரும் அருமையாக நடித்தீர்கள்.வாழ்த்துகள்முத்துராமன் சார், மகேஷ் சார், சாம்ஸ் சார்,கோதண்டம் சார் – அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் ஸ்கிரிப்ட் என்ன வேண்டும் என்றதோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி.
மாஸ் ஆடியோ அவர்களுக்கும்,உத்தரா புரொடக்‌ஷன்ஸ் அவர்களுக்கும் நன்றி.

இசைஅமைப்பாளர் சதீஷ் பேசியதாவது….

இன்று எனக்கு ஒரு சிறப்பான நாள்.இது எனது வாழ்க்கையில் ஒரு மைல்கல் நாள்.இந்தப்படத்தை நான் செய்ததில்லை.இந்தப்படமே என்னை தாண்டி வந்து என்னை உருவாக்கியது.
“ஏதும் இல்லா எல்லாம்” பாடலுக்காக எனது குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பாடலாசிரியர் கார்த்தி,பாடகர்கள் வி.வி.பிரசன்னா மற்றும் சஹானா அவர்களுக்கும் நன்றிகள்.
மாஸ் ஆடியோ உரிமையை வாங்கியவர்களுக்கு நன்றிகள் என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பேசியது…..

“கம்பி கட்டும் கதை” தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த சிறப்பு விழாவில் பங்கேற்கும் இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றிகள். இந்தப்படத்தில் நாமும் ஒரு சிறிய பங்களிப்பு செய்ய இருக்கிறோம். நடிகர் நட்டி சாருடன் நடிக்கப்போகிறோம்.
எனக்கு முருகானந்தம் அவர்களை மிகவும் பிடிக்கும் – நல்ல மனுசன்,நல்ல பேச்சாளி.
நட்டி சார், நீங்களும் எனக்கு மிகவும் பிடித்தவர்.  ‘மிளகா’யிலிருந்து  ‘மகாராஜா’ வரைக்கும் எனது பயணத்தில் நீங்களும் இருந்தீர்கள்.
இந்தப்படத்தில் உள்ள அனைவரும் மிகச்சிறந்த வேலை செய்துள்ளனர். இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.எடிட்டர் ஃபாசில் அவர்களுக்கு நன்றி.
நடிகர் சாம்ஸ், நாயகி மற்றும் இரண்டாம் நாயகி ஆகியோர் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
இந்த உலகம் எங்களுக்குக் கொடுக்கிற ஒரு வித்தியாசமான வாய்ப்பு இது. மக்கள் அளிக்கும் புகழே நமக்கு பாராட்டு.
மீடியா நண்பர்களே – இந்தப்படத்தை ஆதரிக்கவும். இது ஒரு நல்ல கதை,ஒரு நல்ல படைப்பு. அனைவருக்கும் இதை கொண்டுபோய் சேர்க்கணும். என வாழ்த்துகிறேன்.அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றார்.

பாடலாசிரியர் கு.கார்த்திக் பேசியதாவது…..

அன்னைத்தமிழ் மற்றும் நம் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது.கம்பி கட்டுன கதை ஒரு குடும்பத்துக்கு ஏற்ற படம்.தீபாவளி வெளியீடாகும் இப்படத்திற்கு நான்கு பாடல்களை எழுதியிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றிகள். பத்திரிகை நண்பர்கள் இந்தப்படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்.என்னை இந்தப்படத்துக்காக அணுகிய சசி செல்வம் அவர்களுக்கு நன்றி என்றார்.

பாடலாசிரியர் ஆப்பா ராஜா பேசியதாவது…:

அனைவருக்கும் வணக்கம்.இந்த இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.இப்போது தமிழ்பாப்டல்கள் குறைந்து வருவதால் இந்த மாதிரியான படங்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் தேவையாக இருக்கிறது. நன்றி என்றார்.

கலை இயக்குநர் சிவகுமார் பேசியதாவது…..

அனைவருக்கும் என் நன்றிகள்.இந்தப் படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

ஒளிப்பதிவாளர் எம் ஆர் எம்.ஜெய் சுரேஷ் பேசியதாவது…….

இங்கு வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.கம்பி கட்டுன கதை ஒரு சிறந்த தீபாவளி ட்ரீட்.எல்லோரும் இதைப்பார்த்து ஆதரிக்க வேண்டும்.தயாரிப்பாளர் ரவி சார் மற்றும் உத்திரா புரொடக்‌ஷன்ஸ் குழுவிற்கு நன்றி. நட்டி சார், சிங்‌ம் புலி சார், சாம் சார் ஆகியோர்களுடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. நன்றி என்றார்.

நடிகர் முத்துராமன் பேசியதாவது….

இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். மங்காத்தா மூவிஸ் மற்றும் உத்திரா புரொடக்‌ஷன்ஸ் குழுவிற்கு நன்றி. கம்பி கட்டுன கதை ஒரு நல்ல காமெடி படம். பாத்து நல்லா சிரிச்சிட்டு வீடு போங்க. நன்றி என்றார்.

இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி பேசியதாவது…..

அனைவருக்கும் வணக்கம்.இங்கு வந்த அனைவருக்கும் நன்றி.எலிசபெத் தலையில கம்பி இருக்கிறது – அதாவது காமெடியா வைச்சிருக்கோம். இந்தப்படத்தை அவ்வளவு மாஸாகவே செஞ்சிருக்கோம். இசை உரிமைகள் வாங்கிய நிறுவனத்திற்கும் நன்றி. ஹரி உத்திரா அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கிறது. இப்போது சொல்ல முடியாத நிலை. நன்றி என்றார்.

முதல் கதாநாயகி ஸ்ரீரஞ்சினி பேசியதாவது….

அனைவருக்கும் வணக்கம்.இங்கு இருக்கிறதற்கே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன்.தமிழில் இது எனது முதல் படம்.
எல்லாரும் எனக்கு மிகவும் நல்ல ஆதரவு தந்தார்கள். இந்தக்குழுவுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. தயவுசெய்து இந்த படத்தை திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளியுங்கள். நன்றி என்றார்.

இரண்டாவது நாயகி ஷாலினி பேசியதாவது….

வணக்கம் அனைவருக்கும்.பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.உங்கள் ஆதரவு மிகவும் தேவை. என் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.இது என் கரியரில் ஒரு முக்கியபடியாக இருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.

விநியோகஸ்தர், உத்தரா புரொடக்‌ஷன்ஸ் ஹரி உத்தரா பேசியதாவது……

‘கம்பி கட்டுன கதை’ தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப்படத்தை எங்களுக்கு கொடுத்த மங்காத்தா மூவீஸ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தை எடுத்துக் கொண்டதற்கு என்பது பெருமை.
இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமா இருக்கும் என்று நம்புகிறேன்.நாங்கள் இதற்கு முன்பு ‘வெப்’ என்னும் படத்தை வெளியிட்டோம். அந்த மாதிரியே இந்தப்படத்தையும் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கணும்.
பல தமிழ்ச் சொற்கள் (ஸ்லாங்) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.மொத்தமாக இந்தப்படத்தை வெளியிடுவது,இதற்கு நிறைய முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.இதில் நகைச்சுவை மிகுந்த அளவில் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவா’ சுந்தர்ரேசன் சார் நடித்திருக்கிறார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி என்றார்.

இரண்டாவது நாயகன் முகேஷ் ரவி பேசியதாவது….

இங்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம். ‘கம்பி கட்டுன கதை’ என் முதல்படம். இந்தப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.
நேரலையில் (ஸ்பாட்ல) வசனம் பேசினேன். அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ராஜநாதான் பெரியசாமி சார் அவர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. அனைவருக்கும் நன்றிகள் என்றார்.

திரைக்கதை வசனம் எழுத்தாளர் நடிகர் முருகானந்தம் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம். குறுகிய காலகட்டத்தில் இந்தப்படத்தை எடுத்தது மிகச் சிறப்பான விஷயம். ஃபாசில் அவர்களுக்கு நன்றி.
அலுவலகம் போனதுமே 11 பேர் கொண்ட குழு இருந்தாங்க, அதில கொஞ்சம் பேசினாங்க. அப்படி தானே இந்தப்பயணம் துவங்கியது.
‘ஹீரோ யாருனு கேட்டா, நட்டி சார் சொன்னாங்க’—அப்படியே இந்தப்படம் துவங்கியது. கதை ஒத்துக்கொண்டதும்,வண்டியை பிடிச்சு ஊருக்கு போய் படத்தையும் எடுத்தோம்.அனைவரையும் குடும்பமா கவனிச்சீங்க.நீங்க நல்லா இருக்கணும்.
சதீஷ் இசையமைப்பாளர், நட்டி சார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. பி.ஆர்.ஓ. ஷேக் அவர்களுக்கு நன்றி. சிங்கம் புலி அண்ணா, முத்துராமலிங்கம் சார், ஷாலினி, கோதண்டம், நட்டி சார், ரவி சார், மகேஷ் சார் எல்லாருக்கும் நன்றி என்றார்.

‘ஜாவா’ சுந்தரேசன் பேசியதாவது…

ஊடக நண்பர்களுக்கு வணக்கம். அருமையான ‘ரோசாப்பூவை’ குடுத்து வரவேற்றது நலமாக இருக்கிறது. நல்லபடம் எடுத்திருக்காங்க.சின்னதா, பெரியதா இல்ல – நல்லபடம் எடுக்கணும், மக்களிடம் சேரணும் என்பதுதான் முக்கியம்.
இந்த மாதிரி ஒரு நல்லவேடம் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. இந்தப்படத்தை எடுத்துப்பார்த்து மக்களை சிரிக்கவைக்கணும் என்பதே அவருடைய நோக்கம் – அது ஒரு பெரிய விஷயம்.
நட்டி சார், ஹீரோ முகேஷ், சக நடிகர்கள், இசையமைப்பாளர் சதீஷ் – எல்லாருக்கும் நன்றி. தீபாவளிக்கு ‘கம்பி கட்டுன கதை’ படத்தை திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE