சினிமா செய்திகள்

’காக்காமுட்டை’ விக்னேஷ் கலக்கும் ‘குழலி’

‘காக்காமுட்டை’,  ‘அறம்’,  ‘அப்பா’ உள்ளிட்ட  நடித்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர்  நடிகர் விக்னேஷ். இவர் தற்போது இயக்குனர் செரா. கலையரசன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘குழலி’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆரா நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு டி.எம். உதயகுமார் இசையமைக்க, கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ் செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கே.பி. வேலு, எஸ். ஜெயராமன் மற்றும் எம்.எஸ். ராமசந்திரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷமீர் இன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் கிராமத்து எதார்த்த முகங்களோடு உருவாகி உள்ள ‘குழலி’ திரைப்படம் உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது, பின்னணி இசைக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது என 16 விருதுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தினை மொழி திரைக்களம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE