தனுஷ் வசீகரிக்கும் ‘வாத்தி’ ரிலீஸ் தேதி
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் 4 சினிமாஸ் பட நிறுவனங்கள் சார்பில் சூர்யதேவர நாக வம்சி, சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கும் படம் ‘வாத்தி’. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.
ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வெங்கி அட்லுரி எழுதி இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, தமிழில் தயாராகும் ‘வாத்தி’ டிசம்பர் மாதம் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பானது முற்றிலும் முடிவடைந்து, தற்பொழுது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, ‘ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் GV பிரகாஷு டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜே.யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார்.