சினிமா செய்திகள்

’பருத்தி வீரன்’ லுக்கில் பரட்டை தலை நானி : மிரட்டும் ‘தசரா’ போஸ்டர்

நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் பான் இந்தியா படமாக  வெளிவரவிருக்கும் ‘தசரா’ மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திலிருந்து ரகளையான நடனத்துடன் கூடிய அசத்தலான பாடல் தசரா அன்று வெளியிடப்படவுள்ளது. சந்தோஷ் நாராயண் இசையமைப்பில் தூம் தாம் தோஸ்தான் பாடல், நிலக்கரிச் சுரங்கங்களில் நானி நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் அற்புதமான நடனத்துடன் கூடிய பாடலாக இருக்கும்.

பாடலிலிருந்து ஒரு அழகான போஸ்டர் தற்போது வெளியாகவுள்ளது. அதில் முரட்டுத்தனமிகுந்த அதிரடியான கிராமத்து லுக்கில், நானி அசத்தலாக இருக்கிறார். கிட்டத்தட்ட ‘பருத்திவீரன்’ கார்த்தியை ஞாபகப்படுத்தும் நானியின் தோற்றம் மிரட்டல். அதுவே அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியுள்ள ஶ்ரீகாந்த ஒதெலாவுக்கு இது முதல் படம்.  இப்படத்தில் நானியின் காதலியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE