லியோனி பெயரைச் சொல்லாதீர்கள்! – லியோ சிவக்குமார் பேச்சால் பரபரப்பு!

ஒரு மகன் தனது தாயைக் காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள், அதனால் ஏற்படும் சிக்கல்கள், எதிர்பாராத திருப்பங்கள் என தாய்–மகன் பாசம், மனிதநேயம், நன்றியுணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.
விழாவில் பேசிய லியோ சிவக்குமார், இப்படத்திற்காக இயக்குநர் நானியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்ததாகவும், பல போராட்டங்களைக் கடந்து படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். தந்தையின் அடையாளத்தைத் தாண்டி, தனக்கென ஒரு கலைஞனாக அங்கீகாரம் பெற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இயக்குநர் நானி, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே லியோ சிவக்குமாரிடம் இப்படத்தின் கதையைச் சொன்னதாகவும், பல சவால்களைக் கடந்து படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். நடிகர் ஜெய் பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் படத்தின் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளையும், லியோ சிவக்குமாரின் நடிப்பையும் பாராட்டினர்.

ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, துஷ்யந்த், உதயா தீப், காளி வெங்கட், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஃபீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
தாய்–மகன் பாசம், ஆக்ஷன், உணர்ச்சிகள் மற்றும் நன்றிக்கடன் ஆகியவற்றை இணைத்து உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

