சினிமா செய்திகள்

தெலுங்கு பாலகிருஷ்ணாவை டென்ஷனாக்கிய இயக்குனர்: ‘கார்டியன்’ பட விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் ருசிகரம்

சிம்பு நடித்த ‘வாலு’, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’, விஜய்சேதுபதி நடித்த  ‘சங்கத்தமிழன்’  படங்களை இயக்கிய விஜய் சந்தர்  ‘கார்டியன்’ படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள  அந்த படத்தில் ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடிக்க  ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.   இப்படத்திற்கு சாம் C.S மிரட்டலான இசையை அமைத்துள்ளார்.

மார்ச் 8ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் தயாரிப்பாளர் விஜயசந்தர் பேசியதாவது:-

“நான் தொடங்கிய ‘வாலு’ திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகே வெளியானது. அந்த படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். ‘கார்டியன்’ படம் தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன், கொரோனா தொற்று காலம் என்பதால் பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறி விட்டது. அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் தான் இந்த படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர். அப்பொழுதுதான் இயக்குனர்கள் இருவரும் இந்த கதையை என்னிடம் கூறினர். கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் தனது எண்ணத்திற்கு முதலாவதாக வந்தவர் ஹன்சிகா மோத்வானி ஆவார். அதன் பிறகு இந்த கதையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த படத்தை சிறப்பாக முடித்து கொடுத்தார். தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்தில் பணிபுரிய ஆர்வத்தோடு அவர்களாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர். அதுவே இந்த படம் சிறப்பான ஒரு தயாரிப்பாக உருவாவதற்கு மூலக் காரணமாக அமைந்தது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்தோம். சிறப்பாக இந்த படம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது, ஊடக நண்பர்கள் தங்களது ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்”

கலை இயக்குனர்லால்குடி.N.இளையராஜா பேசியபோது,”நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக குருநாதருக்கும் அவரது மாணவர்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரு கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடம் பணிபுரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டேன். அதுபோல சபரி மற்றும் குரு சரவணன் இருவருடனும் பணிபுரிந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய்சந்தர் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அப்படித்தான் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டு பணியாற்ற வந்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளோம்”என்றார்.

 

இயமைப்பாளர் சாம்.C.S பேசியதாவது:-

“சமீப காலத்தில் ஹன்சிகாவுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது.முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்ஷிகாவும் ஒருவர்.மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார். நிறைய ஹாரர் படங்கள் பண்ணும் பொழுது நாம் நிழல் உலகத்திற்கு சென்று விடுவது போல தோன்றும் அது சினிமா என்ற ஆர்வமும் காரணமாகும். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிரத்தையுடன் பணியாற்றி உள்ளேன். இயக்குனர்கள் இருவருடனும் இதுதான் முதல் படம். அவர்களின் கருத்துக்களை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தத் திரைப்படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று அனைவரும் நேர்மையான உழைப்பை கொடுத்துள்ளனர்.தயாரிப்பாளர் விஜய்சந்தர் உள்பட இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கட்டுள்ளார். ஒரு படைப்பு மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற தேடலுடன் திரைப்படத்தை விஜய்சந்தர் உருவாக்கியுள்ளார்.”

 

ஹன்ஷிகா மோத்வானி பேசும் பொழுது,”கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கார்டியன்’ திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்

 

விஜய் டிவி புகழ் நடிகர் தங்கதுரை பேசும் பொழுது,”கே.எஸ்.ரவிக்குமார்  படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.இந்த படத்தில் அவருடைய உதவியாளர்களிடம் பணிபுரிந்துள்ளேன். ‘வாலு’ திரைப்படத்தில் விஜயசந்தர்  எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார். இயக்குனர்கள் குரு சரவணன் மற்றும் சபரி இருவரும் இரவு பகல் பாராமல் இந்த படத்திற்காக உழைத்தனர். ஹன்சிகா அவர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி அவர் மிகவும் அழகான பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அவர்களுடன் நடித்ததும் மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இந்த படத்திற்கு தங்களது கடின உழைப்பை கொடுத்துள்ளனர்” என்றார்.

இயக்குனர்களில் ஒருவரான குரு சரவணன் பேசியதாவது :-

” கே. எஸ்.ரவிக்குமாரிடம்  உதவியாளராக பணியாற்றியது கடவுள் கொடுத்த வரம். தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர்தான். கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே, தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும் இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறினார்.நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். கதையை தயாரிப்பாளர்,அவரது குழுவினர் மற்றும் ஹன்ஷிகாவிடமும் கூறி ஒப்புதல் பெற்றோம்.பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி,ஆசி பெற்றோம்.கதாநாயகி ஹன்ஷிகா,கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, இசையமைப்பாளர் சாம் C.S. ஆகியோர் ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள்தான். இந்த படத்திற்ககு எந்த அளவுக்கு சிறப்பான உழைப்பை அளிக்க முடியுமோ அளித்துள்ளார்கள்.படத்தில் உள்ள அனைத்து நடிகர், நடிகையருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி கூறினார்.படத்தின் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப் பூர்வமான கதைக்களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம்.”

மற்றொரு இயக்குனரான சபரி பேசியதாவது:

“நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர்  கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம். அவர்களை நாங்கள் காட்பாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார் இனிமே எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார். இத்திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும் இத்திரைப்படத்திற்காக வழங்கினார்கள். சாம்.C.S அவர்களும் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, நான் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்து நல்ல பழக்கம் அந்த நினைவுகளை நாங்கள் இப்பொழுது பகிர்ந்து கொண்டோம். இத்திரைப்படத்திற்காக முழு ஒத்துழைப்பையும் நல்கினார். ஊடகத்துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.”

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:-

” நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றிதான் முதலாவதாக பேசுவேன். ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன். இந்த இரட்டை இயக்குனர்களின் முதலாவது படமான கூகுள் குட்டப்பா வெளியாகும் முன்பே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள். சாம்.C.S உடன் பழக்கம் உள்ளது.கலைஞர்-100 நிகழ்விற்கு நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார். எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள். சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.

பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு தெலுங்குபடம் இயக்கியபோது என்னிடம் குரு சரவணன் அசிஸ்டெண்டாக பணியாற்றினான். ஒருநாள் ஃபேன் காற்றில் பாலகிருஷ்ணாவின் தலைமுடி  அசைந்ததை பார்த்து சரவணன் சிரித்துவிட்டான். இதைப் பார்த்துவிட்ட பாலகிருஷ்ணா டென்ஷனாகி அவனை அடிக்கும் அளவுக்கு போனார். ஏனென்றால் பாலகிருஷ்ணா முன்னாடி யாராவது சிரித்துவிட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும். அதனால் நான் ஓடிப்போய்  “இவன் அசிஸ்டெண்ட் டைரக்டர்தான் என்றேன். ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த பாலகிருஷ்ணா..  “இல்லை இவன் ஆப்போசிட் பார்ட்டி” என்று சந்தேகப்பட்டார். ஏனென்றால் அவர் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டார். சந்தேகத்துடன்தான் பார்ப்பார். அப்படித்தான் அன்றும் நடந்தது. ஒருவழியாக அவரிடமிருந்து குரு சரவணனை காப்பாற்றி போக வைத்தேன்”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE