சினிமா செய்திகள்

சமூகத்தை சலவை செய்ய முயலும் ‘கவுண்ட் டவுன் ‘

‘கவுண்ட்டவுன்’ . இது இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் பரவி வரும் போதைப்பொருள் பாவனையின் பின்னணியில் அமைக்கப்பட்ட குறும்படமாகும்.

மகிழ்ச்சியாக வாழும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் போதைப் பொருளுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயற்சிப்பதும், இந்த வழக்கை போலீசார்  விசாரிப்பதுமே படத்தின் மையக் கருவாக அமைந்துள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல, தவறுகளை திருத்தி வாழ வேண்டும் என்று சொல்கிறது படம்.

ஒருவன் எப்பொழுது போதைப் பொருளை பயன்படுத்தத் தொடங்குகிறானோ அவனது வாழ்க்கையின் கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விடுகிறது., போதை மருந்து மாஃபியாவுக்கு கவுண்ட்டவுன் சொல்லி கொண்டு , அவர்களை பின் தொடர்ந்து போலீஸ் படை எப்போதும் இருப்பதாகவும் எச்சரிக்கிறது இந்த படம்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 350 மேற்பட்ட விருதுகளை வென்று சாதனை படைத்த ‘யக்ஷி’ உட்பட தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல குறும்படங்களை தயாரித்த பிரிஜேஷ் பிரதாப் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ரமேஷ் கோகிப்பள்ளி கதை எழுதியுள்ளார்

போதைப்பொருள் சமூகத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் இந்த நேரத்தில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம், அதற்கு எதிரான செய்தியை அளிக்கிறது.

கேரளாவில் பல்வேறு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெற்றிகரமாக திரையிடப்பட்ட இப்படம் தற்போது முழுமையாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE