‘மகாராஜா’ – ஒரு பார்வை
‘மகாராஜா’.. பத்திரிகையாளர்கள் ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை. நடிகர்களாக, தொழில்நுட்ப கலைஞர்களாக அத்தனை பேரும் தங்களது திறமையை நிருபித்திருப்பது உண்மையே..
குறிப்பாக கதையின் நாயகன் விஜய்சேதுபதி, எதிர்மறை பாத்திரத்தில் நடித்த அனுராக், மணிகண்டன் மற்றும் அருள்தாஸ்,நட்டி, சிங்கம்புலி உள்ளிட்ட அனைவருமே நடிப்பு புலிகள்தான்.
ஆனால்.. ஆனால்.. கதையாக சொல்லும் செய்தி, திரைக்கதையாக விவரிக்கும் காட்சிகள் எல்லாமே செயற்கை, போலித்தனம். தனக்கு வந்தால் இரத்தம்; அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற கரு மட்டும் அட்டகாசம். எனினும் ஏமாற்று வேலைகள், பித்தலாட்டம் நிறைந்த ஒரு திரைக்கதையாக ‘மகாராஜா’வை பார்க்கிறேன்.
நாட்டு நடப்பில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மையே.. ஆனால் இந்த படத்தில் கதையின் ஆதாரமாக அல்லது திரைக்கதையின் போக்கை நகர்த்துவதாக அந்த காட்சி திணிக்கப்பட்டிருப்பது மோசடி என்றே நினைக்கிறேன். சஸ்பென்ஸை மெயிண்டெய்யின் செய்வதற்காக புகழ்பெற்ற தம்பி பிலோமின்ராஜின் எடிட்டிங் உதவியிருக்கிறது அல்லது படம் பார்ப்பவர்களை ஏமாற்றுவதற்காக அவர் உதவி இருக்கிறார் என்றே சொல்லலாம்.
இறுதியில் பாவ விமோசனம் தேடும் அனுராக்கின் காட்சிகளில் அவரை மரித்த ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதுபோல் காட்டுவதும் சப்பைக்கட்டு கட்டுவதும் அபத்தம்.
சிங்கம்புலி கேரக்டர்.. அட வேணாம் விடுங்க..
மொத்தத்தில் மட்டமான சிந்தனை மட்டமான திரைக்கதை, குரூர புத்திகொண்ட காட்சிகள்.
இந்த வெண்ணைய்யில் மகள்களை பெற்ற அப்பாக்கள் பார்க்கவேண்டிய படம் என்ற விமர்சனம் படத்தைவிட கொடூர சிந்தனை….
விஜய் சேதுபதி ஆகச்சிறந்த கலைஞன் என்பதில் எள் முனையும் சந்தேகமில்லை. இன்றைய ஹீரோயிச சூழ்ச்சிகள், காழ்ப்புணர்வுகள், வணிக அரசியலில் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மனிதன் நல்ல பெயருடன் 50 படங்களை தொட்டு நிற்பது என்பது பெருஞ்சாதனைதான். அதற்காக அந்த சினிமாவை தங்க கண்ணாடி போட்டு பார்த்து பாராட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
‘மகாராஜா’ வறுமை…