திரை விமர்சனம்

‘பிளாக்’ – மணிசேகரன் பார்வை

சூப்பர்ஸ்டார் படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே ‘Black’படமும் ரிலீஸ் ஆனதில் ஆச்சர்யப்பட்டு இந்தப் படத்தைப் பார்க்க ஆர்வப்பட்டேன்.
படத்தைப் பார்த்தப்பிறகுதான் அதன் காரணமும் விளங்கியது.இப்பொழுது இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குனருக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியலே.அந்த அளவிற்கு படத்தை மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.
பல காட்சிகளில் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜின் கட்டிங்ஸை மிகவும் ரசித்தேன்.அதே போல் இரவு நேரக்காட்சிகளை மிகப்பிரமாதமா படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர் கோகுல் பினோய். தேவையான இடத்தில் மட்டும் சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார் சாம் C.S.
ஒரே இரவில் நடக்கும் கதை.முக்கிய இரண்டே கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, நமக்கு சற்றும் போரடிக்காமல் சுவாரஸ்யமான திரைக்கதையமைத்து வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் K.G.சுப்ரமணி. ஜீவாவுக்கு இந்தப் படம் சரியான Re-entry.ஜீவாவைப் பற்றி முன்பொருமுறை முகநூலில் எழுதியுள்ளேன்.அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகருக்கு Re-entry கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியே.
இந்தப் படம் ஹாலிவுட் படமான கோஹெரென்ஸ்(Coherence-2013)படத்தின் அதிகாரபூர்வ Re-make ஆகும்.அந்தப் படத்தையும் பார்த்து இருக்கிறேன்.
ஹாலிவுட் படத்தைக் காட்டிலும் Black திரைப்படம் சுவாரஸ்யமாகவே உள்ளது.அந்தப் படத்தில் ஆண்-பெண் நண்பர்கள் ஏழெட்டு பேர்.இதில் கணவன் மனைவி மட்டுமே. கதை(Spoiler alert):வசந்த்(ஜீவா)மென்பொருள் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர்.கை நிறைய சம்பளம்.அவருக்கு சில நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.அந்த விடுமுறையை சந்தோஷமாக தன்னுடைய காதல் மனைவியுடன் கழிக்க ,தாங்கள் வாங்கியுள்ள கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வில்லா வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு,பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது.அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கிறார்கள் ஆனால்,முடியலே.
இதைப் படிக்கும் பொழுது இது போன்ற கதைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோமே என நினைக்கலாம்;ஆனால்,அதுவல்ல இது.
புதிதாக வந்த அன்றைக்கே இவர்களுக்கு அழகான ஓவியம் ஒன்று கொரியரில் வருவது. தாங்கள்தான் அந்த வில்லாவிற்கு முதன்முதலாக வந்திருக்கிறோம் என நினைத்திருக்கும் வேளையில், எதிர் வீட்டில் லைட் எரிவது.அங்கு சென்று பார்த்தால் இவர்கள் உருவத்திலேயே அங்கிருவர் பேசிக்கொண்டிருப்பது என நமை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் காட்சிகள் பல உண்டு.
எதிர்பாராத ஒரு காட்சியில் உற்சாக மிகுதியில் என்னையும் அறியாமல் கை தட்டினேன்.நீங்களும் அந்தக் காட்சியைப் பார்த்து ஆச்சர்யப்படுவீர்கள்.
ஒரு திரில்லர் திரைப்படத்தை இதற்கு மேலும் விவரிக்கக் கூடாது. அவசியம் திரையரங்கிற்கு சென்று பாருங்கள்.புதியதொரு திரையனுபவத்தை உறுதியாக உணர்வீர்கள்.
சே மணிசேகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE