சினிமா செய்திகள்

அறிவியலும் ஆன்மிகமும் பின்னி பெடலெடுக்கும் ‘மாயோன்’

அறிவியலும் ஆன்மிகமும் கலந்த சிலை கடத்தலை மய்யமாக கொண்ட பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மாயோன்’. அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில்,  சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

படத்தின் விளம்பரத்திற்கு பிரமாண்ட விஷ்ணு சிலை அமைக்கப்பட்ட ரதம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது.  இந்த ரதத்தின் பயணம் படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டு டிரைலர் வெளியிடப்பட்டது.

படம் பற்றி பேசிய இயக்குநர் N.கிஷோர், ”மாயோன் திரைக்கதை மிக ஃபிரஷ்ஷாக இருந்தது. சிபிராஜ் எப்போதும் புதுமையான கதைகள் செய்பவர். அதனால் அவரிடம் சொன்னோம். அவருக்கு பிடித்திருந்தது. படத்தில்  கே எஸ் ரவிக்குமார், மாரிமுத்து  என ஒவ்வொருவருமே படத்திற்கு பொருத்தமாக அமைந்தார்கள். இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக அருண்மொழிதான் காரணம். அவர் படம்தான் முக்கியம் என புரிந்து கொண்டு படத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்தார். கந்தர்வ இசை படத்திற்கு தேவைப்பட்டது. எங்களுக்கு இளையராஜாதான் ஒரே வாய்ப்பாக தோன்றினார் . அவரை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. இப்படத்தின் கதை இந்தியா முழுக்க எளிதாக புரிந்து உணர்ந்துகொள்ள கூடிய கதையாக இப்படம் இருக்கும்.” என்றார்.

தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசியபோது “எனக்குள் பல ஆண்டுகளாக இருந்த மாயோன் கதை இப்போது திரைக்கு வர காத்திருக்கிறது. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் படமாக மாயோன் இருக்கும். ”என்றார்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசும்போது, “  நான் இந்தப்படத்தில் ஒரு நடிகன்தான். இது கடவுள் படம் என நினைத்து விட வேண்டாம். இதில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. இந்தப்படத்தில் படப்பிடிப்பில் ஒரு குகை மாதிரி இடத்திற்கு சென்றோம். அங்கு உள்ளே ஒரு கோயிலே அமைத்திருந்தார்கள். அந்த கலை இயக்கம் பார்த்து பிரமித்தேன். கலை இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.”என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது, “’இண்டியானா ஜோன்ஸ்’, ‘டாவின்சி கோட்’ படங்களெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது போன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை  இந்தப்படத்தில் நிறைவேறியது. இளையராஜா இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும் .அதுவும் இந்தப்படத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இந்தப்படம் சாமி படமெல்லாம் இல்லை. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது.” என்று எதிர்பார்ப்பை பற்ற வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE