கொளுந்துவிட்டு எரியும் கிளாமர் விருந்து ‘ஃபயர்’ : விமர்சனம்
by : jayarani amalan
பிசியோ தெரபிஸ்ட் டாக்டரான பாலாஜி முருகதாஸ், திடீரென காணாமல் போகிறார். யாரிடம் விசாரித்தாலும் “அவரு ரொம்ப நல்லவருங்க..” என்ற நற்சான்றிதழ் கிடைப்பதை தவிர, அவருக்கு என்னாச்சு? எங்க போனார்? என்று ஒரு துப்பும் கிடைக்காமல் திணறுகிறது போலீஸ்! பாலாஜியை பெத்தவங்களும் அவருக்கு தெரிஞ்ச மத்தவங்களும் பதறும் நேரத்தில் “டாக்டரை நான்தான் கொன்னேனு” ஒருத்தர் வந்து நின்னா, திக்குன்னு இருக்கும்ல. அதுதான் நடக்குது.
ஆனா இதை நம்பாத பாலாஜியின் பெற்றோர், “இவரு பொய் சொல்றார். எங்க மகன் எங்ககிட்ட போன்ல பேசினான்”னு மறுக்க, மண்டையை பிச்சுக்கொள்ளாத குறை இன்ஸ்பெக்டர் ஜே.எஸ்.கே.வுக்கு ( படத்தின் தயாரிப்பாளர் –இயக்குநர் இவர்தான்) எக்ஸ்பிரஸ் வேகத்தில் சஸ்பென்ஸ் வேகமெடுக்க கேண்டீன் வியாபாரத்திற்காக விடப்படுகிறது இடைவேளை !
இரண்டாம் பாதி.. ஓபன் பண்ணினா.. நல்ல டாக்டருன்னு சொல்லப்பட்ட பாலாஜி, பல பெண்களிடம் செய்த லீலைகள் அம்பலமாகுது. அதிருக்கட்டும் பாலாஜி உயிரோட இருக்காரா இல்லையான்னு க்ளைமாக்ஸ் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கறவங்க.. படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க!
பிக்பாஸ் பிரபலமான பாலாஜிக்கு ‘நான் அவனில்லை’ ஜீவன் மாதிரியான கேரக்டர். ஒன்றல்ல இரண்டல்ல லட்டு மாதிரி நான்கு பெண்களை ஏமாற்றி வேட்டையாடும் நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார்!
ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி , காயத்ரி என்று அந்த நாலு லட்டுகளில் ரச்சிதா கிளாமர் டெரர்! சீரியலில் ஹோம்லியா வந்தவர் இதில் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த தாராளம் ஏராளம் என கிளாமர் விருந்து படைக்கிறார். மத்த மூணு பேரும் மட்டம்னு சொல்ல முடியாது. அவங்களுமே ஃபயர்தான். அப்புறம் சிங்கம்புலி, சுரேஷ் சக்கரவர்த்தின்னு நட்சத்திர லிஸ்ட் நீளுது. அவரவர் பங்கை சரியாக செய்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜே.எஸ்.கே. இன்ஸ்பெக்டர் கெட்டப்பில் கச்சிதம்! நடிப்பிலும் குறையில்லை. ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் டீமும் கிளாமர் விருந்து கதைக்கு ஏற்ற பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குநர். நாட்டில் தொடரும் பாலியல் அத்துமீறலுக்கு தீர்வு; இந்த பிரச்சனையை அலசும் விதத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்!
திரைக்கதையில் சிறு சிறு குறைகளை தவிர்த்திருந்தல் கொளுந்து விட்டு எரிந்திருக்கும் இந்த ‘ஃபயர்’ .