விஜய்யை கைது செய்ய வலியுறுத்தல்: திருமா கொளுத்திய வெடியை அணைத்த முதல்வர்!
கரூர் விவகாரம் சிபிஜ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தவெக தலைவர் விஜயை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தலை மறுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சமீபத்தில் முதலமைச்சரை சந்தித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அப்போது “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருக்கலாம்”என்று ஆதங்கப்பட்டாராம் திருமா. ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவராச்சே முதல்வர். அவர் திருமாவிடம் சொன்னதக சொல்லப்படுவது இதுதான்…
![]()
“விஜய் மீது நாம் நடவடிக்கை எடுத்தால், அதுவே அவருக்கு ஆதரவு பெருக வாய்ப்பை உருவாக்கிவிடும். தற்போது வழக்கு சி.பி.ஐ வசம் சென்றிருப்பது ஒரு வகையில் நல்லதுதான். ஏனென்றால், நாம் விசாரித்தால்கூட ‘பழி வாங்குகிறது தி.மு.க’ என அரசியல் செய்வார்கள். இப்போது அதற்கும் இடமில்லாமல் போய்விட்டது’ என்றாராம் மு.க.ஸ்டாலின்.
அரசியலை கரைத்து குடித்தவராயிற்றே…

