சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த அதிரடி ‘தர்மன்’ : பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது திரைப்படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்ட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். சென்னையில் படத்திற்கான பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சண்டைக்காட்சி இயக்குநராக அன்பறிவ், ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். ரஜினிகாந்த் பேட்டை படத்திற்குப் பிறகு சிம்ரனுடன் இணைந்து நடிக்கிறார்.

டாக்டர் உடையில் ரஜினி ஆபரேசன் கத்தியுடன் ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் புகைப்படம் பர்ஸ்ட் லுக்காக வெளிவந்துள்ளது. தர்மன் என்ற படத்தின் டைட்டிலுக்குக் கீழே த டெட்லி டாக்டர் என வரிகள் இடம்பெற்றுள்ளன.
ரஜினியின் 173 வது திரைப்படத்தை இயக்குநர்கள் சுந்தர் சி, சிபி சக்கரவர்த்தி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் இயக்குவதாக இருந்தது. தற்போது நான்காவது இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து இணைந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE