[quads id=2]

 ‘மிரள்’ – திரைவிமர்சனம்

தலைப்பு இப்படி இருக்கே… அதுக்கு 50 சதவீதமாவது நியாயம் சேர்த்திருப்பங்களா? என்று ஆவலுடன் இருக்கையில் அமர்ந்தால் முதல் காட்சியிலேயே திடுக்கென்று பயப்படவைத்து மிரளில் மிரட்டியிருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

பரத் – வாணி போஜன் காதல் தம்பதிகள். ஒருநாள் குடும்பத்துடன் காரில் போகும்போது மர்ம உருவம் ஒன்று பரத்தை கொலை செய்கிறது. ஆரம்பத்திலேயே ஹீரோ மண்டைய போட்டுட்டா கதை எப்படி நகரும்? அந்த சம்பவம் வாணி போஜன் கனவில் வரும் சம்பவம். அவர் அப்படி கனவு கண்டதிலிருந்து கெட்ட சகுணங்களாகவே நடக்கிறது.  குலதெய்வம் கோயிலில் கெடா வெட்டி சாமி கும்பிட்டா எல்லாம் சரியாகிடும் நம்பிக்கையில் பரத், தனது மனைவி குழந்தையுடன் வாணி போஜன் ஊருக்கு வருகிறார்.

குலதெய்வம் கோயில் வேண்டுதலை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பும் வழியில் வாணிபோஜன் கனவு கண்டதுபோல மர்ம உருவம் பரத்தை தாக்கிவிட்டு வாணிபோஜனையும் குழந்தையையும் கடத்திச்செல்கிறது. அந்த உருவம் எது? எதற்காக பரத் குடும்பத்தை பதைபதைக்க வைக்கிறது என்ற கேள்விகளுக்கும் அதிர்ச்சிக்கும் விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

படம் தொடங்கி முடியும் வரை திடுக் திருப்பங்கள் மெயிண்டெயின் ஆவது படத்தின் ஆகபெரும் பலம். காதல் மனைவியின் நிலையை நினைத்து அவருக்கு தெரியாமல் கலங்குவது; மனைவி, குழந்தையை காப்பாற்ற ஆபத்தை பொருட்படுத்தாமல் துணிவு காட்டுவது; மாமனார் கே.எஸ்.ரவிக்குமாரிடம் மனமுறுக மன்னிப்பு கேட்பது என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பரத்தின் காதல் மனைவியாக வாணிபோஜன் வசீகரம். கெட்ட கனவை நினைத்து நினைத்து மிரளும்போது முகபாவனைகளால் படம் பார்ப்பவர்களையும் மிரட்டுகிறார். பரத்தின் நண்பராக வரும் ராஜ்குமாருக்கு படத்தின் திருப்புமுனைக்கான கேரக்டர். சிறப்பாக செய்திருக்கிறார். பரத்தின் மகனாக வரும் சிறுவன், மாமனாராக கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட கேரக்டர்களும் சிறப்பு.

திகில் படத்துக்கு பொருத்தமாக சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும் பிரசாத்தின் பின்னணி இசையும் மிரளுக்கு மெருகேற்றியுள்ளது. லாஜிக் சறுக்கல்; சில இடங்களில் விறுவிறுப்பை குறைக்கும் திரைக்கதை நகர்வு போன்ற குறைகளை தவிர்த்திருந்தால் இன்னும் கூடுதலாக மிரட்டியிருக்கும் இந்த ‘மிரள்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விமர்சனம்

‘ஆலகாலம்’. விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் குடியை ஒரு கொண்டாட்டமாகவும் கேளிக்கையாகவும் வெளிப்படுத்தி வரும் நிலையில் ‘குடி குடியை கெடுக்கும்’ என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதிய பொழிப்புரை தரும் வகையில் குடியை மையப்படுத்திக் கதை அமைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘ஆலகாலம்’.   இப்படத்தை அறிமுக இயக்குநரும், நடிகருமான ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.   இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்து பார்க்கலாம்.   விழுப்புரத்திற்கு அருகே உள்ள கிரிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு […]

Read More
விமர்சனம்

‘கும்பாரி’ விமர்சனம்

கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும் மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும் நண்பர்கள்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நட்புடன் இருப்பவர்கள். ஒரு நாள் நாயகி மஹானாவை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள் அவர் மூச்சு முட்ட ஓடுகிறார். வழியில் கண்ணில் பட்டவர்களிடம் உதவி கேட்கிறார். யாரும் வரவில்லை .பயந்து விலகிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்த விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை […]

Read More
விமர்சனம்

‘வான் மூன்று’ திரை விமர்சனம்

இப்போதெல்லாம் திரையரங்கில் வெளியாகும் படங்களைவிட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில்  ‘ஆஹா’ தளத்தில் வெளிவந்து பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் படம்தான் ‘வான் மூன்று’ எப்படி இருக்கிறது படம்? ஒரு மருத்துவமனை அதில் சந்திக்கும் சில மனிதர்கள் அவர்களை சார்ந்த பிரச்சனைகளே படத்தின் ஒன்லைன். கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால்.. தற்கொலைக்கு முயற்சி செய்த அம்முஅபிராமி, காதல் தோல்வியால் உயிரை இழக்க துணிந்த ஒரு கதாபாத்திரம், மனைவியின் சிகிச்சைக்கு போதிய […]

Read More
[quads id=1]