மர்மங்களின் பின்னணியில் விறுவிறுப்பான ஆட்டம்: ‘நிறம்’ திரை விமர்சனம்!
முகேன் ராவ் காதல், ஆக்ஷன் என இரண்டிலும் கவனம் ஈர்ப்பதுடன், காதலியைக் காப்பாற்றப் போராடும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி துடிப்பான நடிப்பால் கவர்கிறார். தன்யா ஹோப் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிதின் சத்யா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சுரேகா வாணி, கஜராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதைக்கு வலு சேர்க்கிறார்கள்.
சான்டோனியோ டெர்சியோவின் ஒளிப்பதிவு திரில்லர் உணர்வைக் கூட்டுகிறது. டி.இமானின் இசையும் பின்னணி இசையும் காட்சிகளுக்கு வேகம் சேர்க்கின்றன. வெவ்வேறு கதைகளைத் தனித்தனியாகப் பயணிக்க வைத்து, இறுதியில் ஒரே முடிச்சில் இணைக்கும் சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு படத்தின் முக்கிய பலம்.
மருத்துவப் பின்னணியில் நிகழும் குற்றங்களை மையமாக வைத்து காதல், காமெடி, ஆக்ஷன், மர்மம் என அனைத்தையும் கலந்து இயக்கியிருக்கிறார் பலராம் கிருஷ்ணா. திரைக்கதையின் முடிச்சுகள் சுவாரஸ்யத்தைக் கூட்டினாலும், சில அழுத்தமில்லாத காட்சிகள் வேகத்தைக் குறைக்கின்றன.
மர்மங்களை ஒன்றோடொன்று முடிச்சுப் போட்டு, விறுவிறுப்பாக அவிழ்க்கும் முயற்சியில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், ‘நிறம்’ ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லர்!

