சினிமா செய்திகள்

ராம்சரணின் அடுத்த அதிரடி ‘RC16’ : ஜோடி ஜான்விகபூர்

ஆஸ்கார் வரை பிரபலமாகிவிட்ட ராம்சரணுடன்  பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான  ஜான்வி கபூர் முதல்முறையாக  இணைந்து நடிக்கிறார்.

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண், ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் அடுத்து நடிக்கும்  பான் இந்திய படம் RC16.  முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.

இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால், அவரை பட குழுவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஜோடி ரசிகர்கள் விரும்பும் வகையில் மயக்கும் கெமிஸ்ட்ரியை திரையில் வழங்குவர். இந்த மெகா முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இயக்குநர் புச்சி பாபு ஆற்றல் வாய்ந்த திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். அது உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை கவரும். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE