‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் புதிய ஃபேண்டஸி படம் அறிவிப்பு!
‘ஹனு-மேன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ஹனுமேன் யுனிவர்ஸின் அடுத்த படைப்பாக ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. இதில் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
Vi. ஆனந்தின் கற்பனையில் உருவாகும் இப்படத்தை அவர் இயக்குகிறார். புராணம், ஃபேண்டஸி மற்றும் பிரம்மாண்டமான காட்சி அனுபவத்தை மையமாகக் கொண்டு புதிய உலகத்தை உருவாக்கும் இப்படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கின்றனர். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

