சினிமா செய்திகள்

‘லோன் வுல்ஃப்’ அவதாரத்தில் ராம் போதினேனி!

நடிகர் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 திரைப்படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கருப்பு உடையில், வித்தியாசமான ஹேர் ஸ்டைல், தலையில் டாட்டூ, ஒரு கையில் துப்பாக்கி, மறுகையில் டெடி பியர் என மர்மமான தோற்றத்தில் ராம் போதினேனி இடம்பெற்றுள்ளார். தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து உலகைத் தனியாக எதிர்கொள்ளும் வலிமையான மனிதனின் கதையாக இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணா போதினேனி தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தெலுங்கில் அறிமுகமாகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் ஹெய்ன், விக்ரம் மோர், கெவின் ஆகியோர் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.

விரைவில் படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுக்கும் ராம் போதினேனி, இந்த ‘லோன் வுல்ஃப்’ மூலம் ரசிகர்களுக்கு என்ன விருந்தளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE