மணிரத்னம் – லைகா புரொடக்ஷன் தமிழ்க்குமரன் சக்சஸ் சந்திப்பு
உலகம் முழுவதும் வசூலில், ரசிகர்களின் வரவேற்பில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். அமரர் கல்கியால் எழுதப்பட்டு 1950களில் வெளிவந்த இந்த நாவலை தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலரும் திரைப்படமாக்க முயற்சித்தும் முடியாமல் போன நிலையில் நடக்காத ஒன்றை நடத்திக்காட்டி வெற்றிக்கு வித்திட்டும் இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இமாலய வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தது லைகா புரொடக்ஷன் நிறுவனம்.
நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்திருக்கிறது. படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் மணிரத்னத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M செண்பகமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களது மகிழ்வையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுனத்தின் தயாரிப்பு நிர்வாகி சிவா ஆனந்த் இந்த நிகழ்வின்போது உடனிருந்தார்.