ஜாக்ரன் சர்வதேச திரைப்பட விழாவில் ’டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘ஆசான்’ குறும்படம் திரையீடு!
‘யமுனா’, ‘கட்டில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இ.வி.கணேஷ்பாபுவின் தயாரிப்பு, இயக்கத்தில் உருவான குறும்படம் ‘ஆசான்’. இக்குறும்படத்தில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ்பாபு.
குற்றம் செய்யும் மாணவர்களை பொதுவெளியில் அவமானப்படுத்தாமல், அவர்களின் தவறை உணரச் செய்து அவர்களாகவே திருந்தும் ஒரு வாய்ப்பை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி ஆசான் குறும்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இ.வி.கணேஷ்பாபு இயக்கிய கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது பெற்றஸ்ரீகாந்த் தேவா இந்த குறும்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ராஜராஜன் ஒளிப்பதிவில் சுராஜ்கவி படத்தொகுப்பில் உருவான இக்குறும்படத்தில் இவி.கணேஷ்பாபுவுடன் தஞ்சை அமலன், ராமன் அப்துல்லா, ஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இக்குறும்படம் டெல்லி ஸ்ரீ போர்ட் ஆடிட்டோரியம் ஆடி4 திரையரங்கில் நாளை ( செப்டம்பர் 5ஆம் தேதி) காலை 11:45 மணிக்கு ஆசான் குறும்படம் திரையிடப்படுகிறது. ஏற்கனவே ஆசான் குறும்படம் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அமெரிக்கா வரை சென்று சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.
ஜாக்ரன் திரைப்பட விழாவில் நடிகர் சசிகுமார் நடித்து மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

