திரை விமர்சனம்

‘டியர் ரதி’ திரை விமர்சனம்!

பெண் என்றாலே பிடிக்காத நாயகனுக்கு (சரவண விக்ரம்) பாலியல் தொழில் செய்யும் ஹஸ்லி அமான் மீது வருகிறது ஈர்ப்பு. ஒன் டே டேட்டிங் அக்ரிமெண்டில் ஹஸ்லியுடன் ஜாலியோ ஜிம்கானா கிளம்புகிறார் ஹீரோ. பெண் என்றாலே பேசத்தயங்கும் சரவண விக்ரம் ஹஸ்லியுடன் பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக்கொண்டே இருக்கிறார். இது ஒரு டிராக்கில் போக, இன்னொரு டிராக்கில் ஹஸ்லியை உண்டு இல்லைன்னு செய்ய துரத்துகிறது ஒரு கும்பல். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் ஹஸ்லி எப்படி ஹேண்டில் செய்கிறார். அந்த கும்பல் ஹஸ்லியை துரத்துவதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறாள்  ‘டியர் ரதி’.

‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் புகழ் சரவண விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் முதல் படம். கேமரா முன் நின்ற அனுபவம் எக்கச்சக்கம் என்பதால் எந்த பதட்டமும் இல்லாமல் நடித்திருக்கிறார். ஆனால் நான் ஸ்டாப்பாக பேசிக்கொண்டே இருப்பதுதான் ஆடியன்ஸை பதட்டப்பட வைக்கிறது. நாடகத் தனத்தை மறந்து நடிங்க சாரே..

நாயகியாக ஹஸ்லி அமான். இயல்பான தோற்றம், எதார்த்த நடிப்பு என கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். வரதன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன். காமெடி+ வில்லத்தனத்தை கலந்துகட்டிய கதாபாத்திரம் குழப்பியடிக்கிறது.

காட்வினாக சாய் தினேஷ், பத்ராம் மற்றும் ஷெரிப்பாக யுவராஜ் சுப்பிரமணியமும் தங்கள் கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார்கள். டார்க் காமெடி கதைக்கு பொருத்த ஒளிப்பதிவை செய்திருக்கும் லோகேஷ் இளங்கோவன், எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பலம்.

படத்தின் இயக்குநர் பிரவீன் கே. மணி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE