நிகழ்வுகள்

இளையராஜாவால் வளர்ந்தவர்கள் : “உயிரிணையே” ஆல்பம் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் பேச்சு!

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில், கங்கை அமரன் பாடல்கள் எழுத, சதா சுதர்சனம் இசையில் “உறவுகள்” என்ற தலைப்பில் உருவாகியுள்ள வீடியோ இசை ஆல்பம் “உயிரிணையே”.

ராஜ வாழ்க்கை வாழ்வது போன்ற ஒரு ஏழை தம்பதியின் கனவை கருவாக கொண்டு அழகான ஏஐ தொழில்நுட்ப காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு தங்களது குரலால் உயிர்கொடுத்துள்ளனர் பின்னணி பாடகர்களான தவசீலி தன்ராஜ்  மற்றும்  ஃபர்கான் நவாஸ்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன்,

பாடகர்கள் தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கங்கை அமரன் பேசியதாவது:-

“தயாரிப்பாளர் கிளாடி ஜெராடுவின் நல்ல எண்ணம்தான் இந்த ஆல்பம். அருமையான சமூக உறவுகளை ஏஐ தொழில்நுட்பத்துடன்  நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார். எங்கள் அண்ணா இசைஞானியின் வாசிப்பில்தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம். எங்கள் குழந்தைகளை அண்ணனிடம்தான் சாரீரம் கற்றுக்கொள்ள அனுப்புவோம். அப்படிப்பட்ட குருக்களுடன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா இல்லையா என்பது தெரியவில்லை.

முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலையாக பாடுவோம். இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம். AI இல் feed பண்ணி பாடுகின்றோம். அதற்கு நாம் எப்படி நம்மளை பெருமைபடுத்தி கொள்வது? உண்மையை சொல்ல வேண்டுமென்றால்  Ai தொழில்நுட்பம் நம்மளை கெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி நம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது.

ஒரு தீமை  AI இல் கொடுத்துவிட்டால், அதுவே பாட்டெழுதிவிடுகிறது. இதில் எப்படி நம்ம பேரை போட்டுக் கொள்வது? எதற்கு சொல்கிறேன் என்றால் வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். எழுதத் தெரிந்திருக்க வேண்டும். வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற திறமைகளை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை. 50 வருடங்களாக இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களை நேசித்து அழைத்துச் செல்லுங்கள். கனவோ நினைவோ இசையே எங்கள் மூச்சு” என்றார்.

பாடல் : கங்கை அமரன், இசை : சதா சுதர்சனம்,

பேஸ் கிடார் : செந்தில், கீ போர்ட் : அஸ்வின்,

பாடகர்கள் தவசீலி தன்ராஜ் , ஃபர்கான் நவாஸ்,

மக்கள் தொடர்பு : சாவித்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE