சினிமா செய்திகள்

‘தகப்பன்’ படத்தின் ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள்!

கணவன் – மனைவி காதல், புதுமண வாழ்க்கையின் அழகான தருணங்களை மெலடியாகச் சொல்லும் ‘சொக்க வச்சாளே’ பாடல் வெளியாகியுள்ளது.

ஜீவா, ரஜிஷா விஜயன் நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரா. வெங்கட் இயக்கும் ‘தகப்பன்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘சொக்க வச்சாளே’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

மார்ஷல் ராபின்சன் இசையில், மோகன் ராஜன் வரிகளில், ஹரிசரண், சைந்தவி, நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இப்பாடல், புதுமணத் தம்பதிகளின் காதல், ரொமான்ஸ் மற்றும் அழகான இல்லற வாழ்க்கையை மென்மையான இசையில் வெளிப்படுத்துகிறது.

லாரி ஓட்டுநரான நாயகனுக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் மலரும் காதல், பெற்றோர் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம், கிராமத்து வீட்டில் தொடங்கும் புதிய வாழ்க்கை, கர்ப்பமடையும் மகிழ்ச்சி என இருவரின் வாழ்க்கைப் பயணத்தையும் பாடல் காட்சிகள் வழியாக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், நாயகியின் அம்மாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன.

ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ பாடல் தந்தை – மகன் பாசத்தைப் பேசிய நிலையில், இரண்டாவது பாடல் கணவன் – மனைவி உறவின் காதலையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

மதுரை பின்னணியில் குடும்பப் பாசம், மனித உணர்வுகள் மற்றும் அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், K. குமார் தயாரிப்பில் M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ள நிலையில், சாட்டிலைட் உரிமையை ZEE தமிழ், OTT உரிமையை ZEE5 கைப்பற்றியுள்ளது. டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள ‘தகப்பன்’ படத்தின் மீது, ‘சொக்க வச்சாளே’ பாடல் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE