ஜான்வி கபூரின் ஆபாச படம்!
‘தேவரா: பார்ட் 1’ படத்தில் ஜான்வி கபூர் இடம்பெற்ற ‘சுட்டமல்லே’ பாடல் காட்சிகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகவும் தவறாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜூனியர் என்.டி.ஆர்., மார்பிங் வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் அதைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியும் இந்த ஏஐ மார்பிங் கலாச்சாரத்துக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தனிநபர் பிரச்னையாக பார்க்கப்படக் கூடாது என்றும், தெலுங்குத் திரையுலகம் ஒன்றிணைந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனிக்குழு மற்றும் உதவி மையம் அமைக்க வேண்டும், ஏஐ மூலம் உருவாக்கப்படும் அவதூறு மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றை திட்டமிட்டு பரப்புபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகைய வீடியோக்களைப் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ வேண்டாம் என்றும், அவற்றை உடனடியாக சமூக வலைதளங்கள் மற்றும் இணையக் குற்றப்பிரிவில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

