சூர்யாவின் ‘க்ளிக்’ மேளா! அடுத்த ஸ்டெப் அரசியலா?..
அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரசிகர்களை சந்தித்த சூர்யா , ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார்.

சூர்யாவின் இந்த எளிமையான அணுகுமுறையும், ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்ட விதமும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
சூர்யாவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் ரசிகர்கள் அதிகரித்துகொண்டே வருகிறார்கள். தனது நற்பணி மன்றத்தை இந்த நிமிடம்வரை அமைதியாக நடத்திவரும் சூர்யா, வரும் காலங்களில் நற்பணி மன்றங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்வாரா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அடுத்தக்கட்டம் என்பது அரசியல் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.
சூர்யா சார் உங்க ப்ளான் என்ன?

