சினிமா செய்திகள்

ரஜினிக்கு வில்லனான நெப்போலியன் : வெளிவந்த ‘எஜமான்’ சீக்ரெட்!

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ள படம்  ‘அமெரிக்க ஆவி’ .200-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள், 40-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடிக்க, அமெரிக்காவில் உருவான வித்தியாசமான காமெடி ஹாரர் திரைப்படமான இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்  பேசியதாவ்து:-

” புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது நான் ‘உறுதிமொழி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்- ஒல்லியாக உயரமாக இருந்த ஒருவரை ‘இவர் தான் குமரேசன்’ என அறிமுகப்படுத்தினார்.‌ அப்போது அவரிடம் ‘நான் உன்னை மிகப்பெரிய வில்லனாக நடிக்க வைக்கிறேன்’ என உறுதிமொழி கொடுத்தேன். அதன் பிறகு ‘எஜமான்’ படத்தில் அவரை நடிக்க வைத்திருந்தேன் அதற்காக கடுமையாக போராட வேண்டியது இருந்தது ரஜினி சாரே வேண்டாம் என்று சொன்னார். அப்போது அவரிடம் ஏன் நெப்போலியன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்? என்பதற்கான காரணத்தை சொன்னேன். அதைக் கேட்டு இது புதிதாக இருக்கிறதே..? என சொல்லிய பிறகு அவர் ஒப்புக்கொண்டார். நெப்போலியனுக்காக அந்தக் கதையின் பல மாற்றங்களை செய்தேன். அந்தப் படத்தில் அவர் பேசுவதை போல் இடம்பெறும் ஒரு வசனம் ( கல்யாண வீடாக இருந்தால் மாப்பிள்ளை…) இன்று வரை பிரபலம். அவருடன் அந்த ஒரு படத்தில் மட்டும் தான் பணியாற்றிய முடிந்தது. அது எனக்கு நிறைவானதாகவும் இருந்தது.

இந்த ‘அமெரிக்க ஆவி’ படத்தில் ஆவி யார்? என்பதை சொல்லவே இல்லையே..? இந்த படத்தின் போஸ்டரில் நெப்போலியன் ஒரு கிளென் ஈஸ்ட்வுட் போல் இருக்கிறார். நாம் வயசான ஆவி- நல்ல ஆவி- கெட்ட ஆவி -இளம் ஆவி- விபத்தில் இறந்து போன ஆவி- காதலில் தோல்வி அடைந்த ஆவி -வீட்டை வாங்க முடியாமல் உயிரிழந்த ஆவி – என பல ஆவிகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் எந்த ஆவி அமெரிக்கா ஆவி என தெரியவில்லை. எந்த ஆவியாக இருந்தாலும் நெப்போலியன் ஒரு சிறப்பான ஆவியைத்தான் நமக்கு காண்பிப்பார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE