“பெண்களுக்கு மரியாதை கொடுங்க : ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பட விழாவில் சூர்யா டச்சிங் ஸ்பீச்!
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இப்படத்தில் சூர்யாவுன் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியதாவது:-
“சூர்யா சாருடைய ஃபேன்ஸோட பிளஸ்ஸிங்கும் அன்பும் எங்களுக்கும் வேணும். செட்ல மமிதா பைஜூ எனக்கு ஒரு லிட்டில் சிஸ்டர் மாதிரி. சூர்யா சார் எனக்கு ஒரு பிரதர். ஜி.வி. பிரகாஷ் கூட எனக்கு இது மூன்றாவது படம். எப்போதுமே என்னோட எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட உழைப்பைத்தான் ஜி.வி. கொடுப்பாரு. இந்தப் படம் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை, அவங்களோட அம்மா-அப்பாவுக்கும் ரொம்பப் பிடிக்கிற நல்ல ஃபேமிலி படம்.
கண்டிப்பா ஜென்- சி தலைமுறைக்குப் பிடிச்ச படமா இருக்கும். படத்துல ஒரு பத்து நிமிஷத்துக்கு சூர்யா சாருக்கும் ராதிகா மேமுக்கும் இடையே ஒரு பயங்கரமான காமெடி சீன் இருக்கு. இது ஒரு நியூ ஏஜ் திரைப்படமாக இருக்கும். ” என்றார்.\

நடிகர் சூர்யா பேசியதாவது:-
” என் செல்லங்களா… கண்ணுங்களா… என் சாமிங்களா… ஆடியோ லான்ச் ஃபங்ஷனை ஒரு திருவிழா மாதிரி மாத்திட்டீங்க. ஒரு காரணத்துக்காக என் பிறந்தநாளை நான் கொண்டாடல. இருந்தாலும் தமிழ்நாடு முழுசும் என் பிறந்தநாளுக்காக நீங்க பண்ணின எல்லாத்தையும் பார்த்தேன்.
5000 பேருக்கு மேல இரத்த தானம் பண்ணிருக்கீங்க. 40,000 பேருக்கு மேல உங்கனால பயன் அடைஞ்சுருக்காங்க. குட்டி குட்டி குழந்தைகளைக் கடைக்கு கூட்டிட்டு போய் அவங்களுக்கு துணிகள் வாங்கி கொடுத்துருக்கீங்க. எல்லாமே நான் பார்த்திட்டுதான் இருக்கேன். இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
‘கருப்பு’ படத்துக்கு பிறகு உங்களை இன்னைக்கு தான் பார்க்கிறேன். ‘கருப்பு’ படத்தை இவ்வளவு பெரிய வெற்றி அடைய வெச்ச குட்டீஸ்க்கும்,பெரியவங்களுக்கும் கட்டி பிடிச்சு ஒரு நன்றிய சொல்லிக்கிறேன். ‘கருப்பு’ படத்தோட நூறாவது நாள் வரப்போகுது. அதற்காகச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்திட்டு இருக்கு. அதுவும் கூடிய விரைவில் நடக்கும்.
ராதிகா அக்கா கூட நிறைய அனுபவங்கள் இருக்கு. முன்னாடி என்னோட ரெண்டு, மூன்று படங்களுக்கு, இப்பத்தான் நடிக்க வரார்னு காசு வாங்காம சும்மா நடிச்சு கொடுத்தாங்க. கார்த்தி படிக்கிறதுக்காக வெளிநாட்டுக்கு போகனும்னு இருந்தான். ஆனால் அப்போ வெளிநாடு போக பேங்க்ல ஒரு டெபாசிட் இருக்கனும். அந்த டெபாசிட் அளவு எங்ககிட்ட அப்போ காசு இல்ல.
அப்பாவும், ராதிகா அக்காவும் சீரியல்ல ஒன்னா நடிச்சிட்டு இருந்தாங்க. ராதிகா அக்கா தான் அந்த டெபாசிட் பணத்தை கொடுத்தாங்க. கார்த்திக்கு அட்மிஷன் கிடைக்கிற வரைக்கும் இந்த பணம் உங்க பேங்க்ல இருக்கட்டும்னு உதவி செஞ்சாங்க. சொல்ல முடியாத நெறைய நினைவுகள் அவங்களோட எனக்கு இருக்கு.
இந்தப் படம் கதை கேட்ட உடனே மமிதா கேரக்டருக்கு நாங்க யாரையுமே யோசிச்சு பார்க்கல. உங்க பேரை தவிர வேறு எந்த பேரும் எங்களுக்கு ஆப்ஷன்லையே இல்ல. நம்ம ரெண்டு பேரும் ஒரு படம் பண்ண வேண்டியதா இருந்தது. ஆனால் அது நடக்கலைன்னு வருத்தம் இருந்தது. இந்தப் படத்துல “You are Like a Magic” அழகா பேசி டப்பிங்கும் ரொம்ப நல்லா பண்ணிருக்கீங்க. மமிதாவுக்கும், ராதிகாவுக்கும் இருக்க கெமிஸ்ட்ரி இன்னொரு ஸ்பெஷல்.

எனக்கு விஸ்வநாத்&சன்ஸ் இன்னொரு புது அடையாளம். அந்த அடையாளத்தை கொடுத்தது வெங்கி. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி படம் பண்ணி… அவரோட எழுத்து மேல எனக்கு பெரிய மரியாதை இருக்கு. இந்தப் படம் உறவுகளை பத்தி அவ்வளவு அழகா பேசும். இந்தப் படம் பார்க்கும் போது உங்க உதட்டு ஓரத்துல ஒரு புன்சிரிப்பு படம் முழுசும் இருக்கும். ரொமான்ஸ் பத்தி பேசும், பேமலிஸ் பத்தி பேசும். ஹீரோ எலிவேஷன் குறையவே குறையாது. ஒரு ஹோல்சம் என்டர்டெயின்மென்ட்டாக இந்தப் படம் இருக்கும்.
தினம் தினம் லவ் பண்ணணும். 20 வருஷம் ஆனாலும் லவ் பண்ணணும். அவங்களுக்கு மரியாதை கொடுத்துட்டே இருக்கனும். நம்மளும் மாறுவோம் அவங்களும் மாறுவாங்க. 20 வயசுல இருக்கிறது வேற, 25 வயசுல இருக்கிறது வேற…பல விஷயங்கள் வாழ்க்கைல மாறிட்டே இருக்கும். அன்பும் அவங்க மேல இருக்க காதலும் என்னைக்கும் மாறவே கூடாது.
ஒரு ஆண் ஒரு இடத்துக்கு போகனும்னா வண்டி எடுத்துட்டு ஒரு மணி நேரத்துல போயிடலாம். ஆனால் அதே ஒரு பெண் அந்த இடத்துக்கு போகனும்னா பத்து மணி நேரம் கூட ஆகலாம். ஏன் சொல்றேனா ?
கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து… வீட பாத்துக்கிட்டு எல்லாத்தையும் காம்ப்ரமைஸ் பண்ணுறது பெண்கள் மட்டும் தான். பெண்களோட வெற்றிக்கு பத்து மடங்கு இல்ல, நூறு மடங்கு சல்யூட் அடிச்சு மரியாதை கொடுங்க. அவங்களோட வெற்றிக்காக காதலை விட மரியாதை நிறையக் கொடுங்க” என்றார்.

