சினிமா செய்திகள்

கானா மன்னன் ‘தேவா’ காலமானார்!

1989ஆம் ஆண்டு ‘மனசுக்கேத்த மகராசா’ படம் மூலம் நடிகர்- இயக்குநர் ராமராஜனால் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா தனது  இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்தவர் தேவா. பிரசாந்த் ஹீரோவாக அறிமுகமான ‘வைகாசி பொறாந்தாச்சு’ படம் தேவா இசையமைத்த இரண்டாவது படம். இந்தப் படத்தில் இடம்பெற்ற   “தண்ணி குடம் எடுத்து”,  “சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது..” உள்ளிட்ட அத்தனை பாடல்களும் படமும் சூப்பர் ஹிட்.  இதனால் இரண்டாவது படத்திலேயே சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழ்நாடு அரசின் விருதை பெற்றார்.

தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்த தேவா, ரஜினிக்கு  ‘பாட்ஷா’,  ‘அருணாச்சலம்’. கமலுக்கு ‘அவ்வை சண்முகி’,  ‘பஞ்ச தந்திரம்’,  விஜய்க்கு ‘குஷி’, அஜித்துக்கு  ‘ஆசை’,  ‘வாலி’, சூர்யாவுக்கு ‘நேருக்கு நேர்’ உள்ளிட்ட படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் தேவாவின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு இசை உலகத்துக்கும் ஈடு செய்ய முடியா இழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE